கதீப், முஅத்தின், முஅல்லிம்களுக்கான தொழில் ரீதியிலான உத்தரவாதங்கள் உடனடியாக ஊர்ஜிதம் செய்யப்படல் வேண்டும்!

0
190

unnamed (3)மஸீஹுதீன் இனாமுல்லாஹ்-

இவர்களுக்காக எல்லோரும் குரல்கொடுக்கவும் ஆதரவு வழங்கவும் வேண்டும்!

இலங்கை முழுவதிலும் உள்ள மஸ்ஜிதுகளில் கடமை புரியும் கதீப்மார்கள் பேஷ்-இமாம்கள், முஅத்தின்கள் மற்றும் பகுதிநேர குர்ஆன்மதரஸா முஅல்லிம்கள் போன்றோர்களிர்கான சம்பளம், கொடுப்பனவுகள் மிகவும் சிற்றூழியர்களது நாள்மற்றும் மாத வருவாயிலும் பார்க்க மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

மஸ்ஜிதுகளில் பொதுவாக முழுநேர ஊழியர்களாக பணியாற்றும் அவர்களுக்கு ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் போன்று எவ்வித தொழில்சார் காப்பீடுகளும் பெற்றுக்கொடுக்கப் படுவதில்லை.

அவர்களுக்கான விடுமுறைகள், ஓய்வூதியங்கள், சேமநல கொடுப்பனவுகள் போன்ற இன்னோரன்ன இன்னோரன்ன விவகாரங்கள் குறித்த பொதுவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஒத்துழைப்புடன் இலங்கை முஸ்லிம்சமய கலாசார விவகாரத் திணைக்களம் தயாரித்து மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைத்தல் கலாத்தின் கட்டாயமாகும்.

உலமாக்களது நலன்களை காப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா இது தொடர்பாக ஆராய்ந்து விதந்துரைகளை முன்வைக்கக் கூடிய ஒரு நிபுணர் குழுவினை அவசரமாக நியமிப்பது சிறந்தது எனக் கருதுகின்றேன்.

இன்றைய நிலையில் வாழ்க்கைச் செலாவணியை கருத்தில் கொண்டு ஒரு தகைமை வாய்ந்த கதீபின் மற்றும் பேஷ்-இமாமின் மாத வருவாய் சுமார் சராசரி 45-50,000 ரூபாய்களை விட குறையாமலும், ஒரு முஅத்தினின் மற்றும் முஅல்லிமின் வருமானம் 25-30,000 ரூபாய்களை விட குறையாமலும் இருப்பது ஊர்ஜிதம் செய்யப் படுவது சமூகத்தின் பொறுப்பாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிமுகம் செய்துள்ள மக்தப் முறைகளினூடாக சில முன்னேற்றங்கள் பலபாகங்களில் காணப்பட்டாலும் மேற்படி விவகாரத்திற்கு உடனடியாக நிலையான தீர்வுகள் கண்டறியப்பட்டு அமுலுக்கு கொண்டுவரப் படல் அவசியமாகும்.

அவர்கள் வயோதிப காலத்தில் சேவையிலிருந்து ஓய்வு பெறும் பொழுது அல்லது நோய்வாய்ப்படும் பொழுதோ மரணம் சம்பவிக்கின்ற பொழுதோ அவர்களுக்கான எத்தகைய சட்ட பூர்வமான ஏற்பாடுகளும் இல்லாதிருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் முஸ்லிம் சமய கலாசார விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதும் பதிவு செய்யப்படாததுமான சுமார் 250 ற்கும்மேற்பட்ட அறபு மதரசாக்கள் இருக்கின்றன, பெரும்பாலும் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் உள் வாங்கப் படுகின்றார்கள்.

அதற்கும் மேலாக நூற்றுக் கணக்கில் ஹிப்லு மதரஸாக்கள் இருக்கின்றன அவற்றிற்கு இளம் சிறார்கள் உள்வாங்கப் படுகின்றார்கள். வருடாந்தம் சுமார் 2500 ஆலிம் ஹாபிஸுகள் பட்டம் பெற்று வெளியேறுவதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசோ சமூகமோ அல்லது வக்ஃபு நிதியங்களோ அவர்களுக்கான தொழில் ரீதியான உத்தரவாதங்களை வழங்குவதில்லை, எல்லோருக்கும் மஸ்ஜிதுகளிலும் மதரசாக்களிலும் தொழில்கள் கிடைப்பதுமில்லை, அவ்வாறு கிடைத்தாலும் உத்தரவாதங்களும், உரிமைகளும் சலுகைகளும் ஓய்வூதியங்களும் அவர்களுக்கு இல்லை.

LEAVE A REPLY