விபத்தில் நான்கு பேர் காயம்

0
121

(அப்துல்சலாம் யாசீம்)

accident0திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற வீதி விபத்துக்களில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் (31) நேற்றிரவு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மின்சார நிலைய வீதியில் முற்சக்கர வண்டி-மோட்டார் சைக்கிளிலில் சென்றவர்களை மோதுண்டு சென்றதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் முற்சக்கர வண்டி சாரதி நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை-திருஞான சம்பந்தர் வீதியைச்சேர்ந்தவர்கள் டி.ஜனனி (26வயது) மற்றும் ஈ.சிவசாந்தி (24வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை துவிச்சக்கர வண்டியும்-மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் காயமடைந்த இரண்டு பேருடைய துவிச்சக்கர வண்டி-மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை பதவிசிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY