இன்று முதல் புதிய தலைக்கவசம் அறிமுகம்

0
112

colles-ateliers-ruby-helmetநாட்டில் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்து உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய தலைக்கவசம் இன்று (1) அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த தலைக்கவசத்தை மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்வோர் இன்று முதல் அணிவது கட்டாயமாக்கப்படுமென தேசிய வீதிப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்வோர் இலங்கை தராதரங்களுக்கு அமைவான தலைக்கவசத்தை பாவிக்க வேண்டும். இது தொடர்பான சட்டவிதிகள் வர்த்தமானியின் பாவனையாளர் விவகாரங்கள் சட்டமூலத்தில் காணப்படுகின்றன.

தேசிய வீதிப்பாதுகாப்பு சபையாலும், போக்குவரத்து பொலிஸாரினாலும் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டவிதிகள் இன்று முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் சேனரத்ன கூறினார்.

இந்த தராதரங்களுக்கு அமையப்பெறாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தண்டிக்கப்படுவர் என இலங்கை கட்டளைகள் நிறுவனம் வர்த்தகர்களுக்கு ஏற்கனவே அறியத் தருகிறது.

#Thinakaran

LEAVE A REPLY