ஜப்பானில் லயன்ராக் புயல் – முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதில் 9 பேர் பலி

0
130

201608311318442353_Nine-people-killed-in-flooded-Japanese-old-peoples-home_SECVPFலயன்ராக் புயலால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் ஜப்பானின் விமான மற்றும் ரெயில் போக்குவரத்து சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர நாட்டின் வடக்கு பகுதிகளையும் வெள்ளம் மூழ்கடித்து வருகிறது. இவாய்சுமி நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றை வெள்ளம் மூழ்கடித்ததில் அங்கிருந்த 9 பேர் பலியானதாக ஜப்பான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர இவாய்சுமி நதிக்கரையில் ஒரு ஆணின் பிரேதமும், குஜி நகரத்தில் ஒரு பெண்ணின் பிரேதமும் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லயன்ராக் புயலின் விளைவாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் கார்கள், வீடுகள் மூழ்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக ஜப்பானின் ஹாக்கைடோ தீவில் பலர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY