உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

0
126

(சபீக் ஹுசைன்)

unnamed (3)உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் காணப்படும் குழருபடிகள் மற்றும் வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதில் இலைக்கப்பட்ட முறைகேடுகள், தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (31) உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணய தேசிய குழுவின் தலைவர் அசோக்க பீரிஸுடன் கலந்துரையாடினார்.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, கல்பிட்டி பிரதேச சபை, ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபை, வண்ணாத்தி வில்லு பிரதேச சபை, சிலாபம் நகர சபை, சிலாபம் பிரதேச சபை, நாத்தாண்டிய பிரதேச சபை மற்றும் கண்டி மாவட்டம் அக்குறனை, தெல்தோட்டை, உடுநுவர, பஹதஹேவாஹெட, பாததும்பர, மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கந்தலாய், கல்பிட்டி முதலான பிரதேச சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணயத்தில் ஏற்பட்டுள்ள குழறுபடிகளை உடநடியாக தீர்த்து முஸ்லிம்களுக்கு சாதகமாக எல்லைகளை மீள் நிர்ணயிக்குமாறு அமைச்சர் அசோக்க பீரிஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஷாபி ரஹீம், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், ஒவ்வொரு பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY