மத்திய தரைக்கடலில் இருந்து இன்று 3000 அகதிகளை மீட்டது இத்தாலி

0
130

201608312048252425_Italy-rescues-3-000-migrants-from-Mediterranean-as-arrivals_SECVPFஉள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம். படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக வரும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இவ்வாறு படகில் தத்தளிக்கும் அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் மீட்டு வருகின்றனர்.

அவ்வகையில், சிசிலி ஜலசந்தியில் இன்று மட்டும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் சுமார் 3000 அகதிகளை இத்தாலி கடலோர காவல் படையினர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளனர். நேற்று 6500 பேரும், ஞாயிற்றுக்கிழமை 1100 பேரும் மீட்கப்பட்டனர். இந்த வாரம் வானிலை சீராக இருந்ததால் ஏராளமான படகுகள் இத்தாலி நோக்கி பயணித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டு இத்தாலிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் அகதிகளாக வந்திருப்பதாகவும், அவர்களில் பலர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஆபத்தான கடல் பயணத்தின்போது 2726 பேர் பலியாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY