ஹிஜாப் பற்றிய தெளிவு மாநாடு

0
595

(ஜுனைட்.எம்.பஹ்த்)

unnamed (2)அண்மை காலமாக உலகளாவிய ரீதியில் பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாம் வலியுறுத்தும் ஆடையாகிய ஹிஜாபுக்கு எதிராக அடக்குமுறைகள் மேற்கொள்ப்பட்டுவரும் நேரத்தில் நமது நாட்டிலும் சில இன வாத சக்திகள் சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

இச் சந்தர்ப்பத்தில் எமது சமூகத்தில் உள்ள மார்க்க அடிப்படை அறிவற்ற சிலர் ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு எதிராக கருத்துக்களை பகிர்வது இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தீனி போடுவது போன்றதும் , எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்ற மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இதனை கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02.09.2016 அன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு மெகட கொலன்னாவ அபூபக்கர் ஜும்மா பள்ளிவாயலில் ” ஹிஜாப் பற்றிய தெளிவு” மாநாட்டை அஷ்அரி ஷாபிஈய்யா என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் :
அஷ்ஷேய்க் அன்பாஸ் முப்தி (தேவ்பந்தி)
அஷ்ஷேய்க் இல்மான் (மழாஹிரி)
அஷ்ஷேய்க் நுஸ்ரான் (பின்னூரி) போன்ற பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்தவுள்ளதுடன் www.Acmyc.com இணையத்தில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந் நிகழ்வுக்கு அனைத்து உலமாக்களும், கல்விமான்களும்், பொதுமக்களும் கலந்து தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றார்கள்..

ஊடக அனுசரணை:
Noon Media
Acmyc.com

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (٣٣:٥٩)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்களை முழுமையாக மறைக்கக்கூடிய ஜில்பாபுகளை அணிந்துகொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 33:59)

சத்தியத்தை விளங்குவோம்;
உரிமைகளை பாதுகாப்போம்.

தகவல் AM. Afzal

LEAVE A REPLY