பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் சிறைச்சாலையிருந்து விடுதலை

0
97

unnamed (1)(விசேட நிருபர்)

பிணை வழங்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூபாலப்;பிள்ளை ஹரன் ஆகிய இருவரும் (31.8.2016) புதக்கிழமை பிற்பகள் 4 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து விடுதலையானார்கள்.

ஆரையம்பதி இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரசாந்தனுக்கும் அவரது சகோரார் ஹரனுக்கும் திங்கட்கிழமை (29.8.2016) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

இதையடுத்து பிணைக்கான நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டதையடுத்து இன்று இவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இவர்களிருவரும் அழைத்து வரப்பட்டு அங்கு கையொப்பமிட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களிருவரும் தலா ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப்பணமும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விடுதலை செய்யப்படல் வெண்டும்.

எமது விடுதலைக்காக பிராத்தித்த மக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் விடுதலைக்காக தொடர்ந்து பிராத்திக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து நல்லது நடக்க வேண்டும். மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படல் வெண்டும்.

எமது தலைவர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் நாங்கள் எமது கட்சியை தொடர்ந்து எப்படி இன்னும் முன்னேற்றலாம் என்பதை பற்றி நாங்கள் ஆலோசிப் போம் தலைவரும் செயலாளரும் விளக்க மறயலில் இருக்கின்ற போதும் கூட எமது கட்சியின் அனைத்து செயற்பாடும் சிறப்பாக நடைபெற்றது என அவர் தெரிவித்தார்.

இவரை வரவேற்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் சி.யோகவேல் உட்பட கட்சி முக்கியஸ்தர்க்ள மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே சமூகமளித்திரு;நதனர்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி பெரிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY