ரசிகர்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

0
129

(அஸீம் கிலாப்தீன்)

Dambulla-Cricket-Groundஒரு நாள் கிரிக்கட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து கிடைக்காத பார்வையாளர்கள் சுவர்களில் ஏறியும் கூச்சலிட்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தோடு தம்புள்ளையினூடான குருநாகல் கொழும்பு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாது போன நிலையில் கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது

6 வருடங்களுக்கு பின்னர் தம்புள்ளையில் சர்வதேச போட்டியொன்றை பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தும் பார்வையிட முடியாது போனமையையிட்டு ரசிகர்கள் ஆக்ரோஷமடைந்துள்ளனர். தம்புள்ளை மைதானத்தில் பார்வையாளர்களுக்கான வசதிகளே உண்டு என்பதும் முன்னர் இடம்பெற்ற போட்டியில் மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கத்து

LEAVE A REPLY