(poem) கருத்து மாறிப் போனது

0
50

(Mohamed Nizous)

அப்பிள்
——–
பழையவருக்கு பழம்
புதியவருக்கு போண்

விண்டோஸ்
————-
நேற்றைய தலைமுறை நிலா பார்க்க
இன்றைய தலைமுறை ‘எல்லாம்’ பார்க்க

லைக்
——
பழைய காலத்தில் பயப்பட்ட சொல்
இந்தத் தலைமுறையின் இருதய நாடி.

மாஷ்மலோ
————
கொழும்பு போன வாப்பா கொண்டு வரும் பொருள்- 80களில்
அன்றொய்ட் குழந்தைகளின்
அப்டேற்றட் வேர்ஷன் – 2016களில்

நெற்
—–
கடிக்கின்ற நுளம்பைத்
தடுக்கின்ற வலை.
படுக்காமல் பார்த்து
கடுப்பேற்றும் Net.

பென்(ட்ரைவ்)
—–
அப்போது பக்கட்டில் சொருகியது.
இப்போது சிலரை இக்கட்டில் சொருகும் drive.

அம்மி
——-
அப்போது அம்மா அரைத்த கல்
இப்போது அம்மாவை அழைக்கிறார் கள்

போட்டோ
———-
அப்போது ஹறாம்
இப்போது பர்ளு

LEAVE A REPLY