ஜமாத் இ இஸ்லாமி மூத்த தலைவருக்கு மரண தண்டனை உறுதி

0
183

ali_2993216hவங்கதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் ஜமாத் இ இஸ்லாமி மூத்த தலைவர் மீர் காசிம் அலிக்கு (63) விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

1971-ல் வங்கதேசத்தில் பாகிஸ் தானுக்கு எதிராக விடுதலைப் போர் நடந்தது. விடுதலையை எதிர்த்த ஜமாத் இ இஸ்லாமி, பாகிஸ்தானிய ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. அப்போது நடந்த போர்க் குற்றங் கள் தொடர்பான வழக்குகளை நடுவர் மன்றம் விசாரிக்கிறது.

விடுதலைப் போராட்டத்தின் போது, கொலை, ஆட்கடத்தல், உள்ளிட்ட குற்றங்களுக்காக ஜமாத் இ இஸ்ஸாமி மூத்த தலை வரும் ஊடக அதிபருமான மீர் காசிம் அலிக்கு நடுவர் மன்றம் மரண தண்டனை விதித்தது. இதை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தது. என்றாலும் இதற்கு எதிராக மீர் காசிம் அலி சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதை உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்நிலையில் மீர் காசிம் அலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

-TH-

LEAVE A REPLY