கிழக்கு மாகாண சபையின் நிதியின் உருவாக்கப்பட்ட கட்டடத்தை மத்திய அரசாங்க அமைச்சர் திறந்து வைப்பது அநாகரீகமான அரசியலை நடாத்துகின்ற சிந்தனையாக உருவாகியுள்ளது: சிப்லி பாறூக்

0
163

Sibly Farook 11(வாழைச்சேனை நிருபர்)

கிழக்கு மாகாண சபையின் நிதியின் உருவாக்கப்பட்ட கட்டடத்தை மத்திய அரசாங்க அமைச்சர் திறந்து வைப்பது அநாகரீகமான அரசியலை நடாத்துகின்ற சிந்தனையாக உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையினால் பிரதேச மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் 2016ம் ஆண்டுக்கான நெல்சிப் திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (திங்கள் கிழமை) இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைகின்றது என்கின்ற சிந்தனையை மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அங்கத்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் உள்ளது.

கிழக்கு மாகாண சபைக்குரிய நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட விற்பனை நிலையம் ஒன்றை முதலமைச்சர் திறந்து வைக்க செல்கின்ற போது மத்திய அமைச்சரும், அவருடைய பாரியாரும் நாங்கள் திறக்க வெண்டுமென்று நடந்து கொண்ட விதம் மத்திய அரசாங்கத்தினுடைய பணத்தை செலவு செய்யாமல் மாகாண சபையினூடாக செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட விற்பனை நிலையத்தில் தங்களுடைய பெயரை போட வேண்டும் என்பதற்காக மிகவும் அநாகரீகமான அரசியலை நடாத்துகின்ற சிந்தனை உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு 1988ம் ஆண்டு தொடக்கம் வட கிழக்கு மாகாண சபையாக இருந்தது. கிழக்கு மாகாணம் என்று பிரிக்கப்பட்டு எட்டு வருட காலத்திற்குள் இந்த ஆட்சியிலே இருந்தவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரம் என்ன, அந்த அதிகாரம் மூலம் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்ற சிந்தனைகளை விட்டு விட்டு உள்ளுர் அரசியலை செய்து கொண்டு அபிவிருத்தி என்ற விடயத்தில் பொழுது போக்காக இருந்துவிட்டு மாகாண சபை இப்போது இயங்க ஆரம்பித்த செய்தி கிடைத்தவுடன் அபிவிருத்தி நடைபெறுகின்ற பொழுது முட்டுக்கட்டை போடுபவர்களாக பெரும்பாலானவர்கள் இருக்கின்றார்கள்.

வீதிகளை புனரமைப்பதற்கு கொண்டு வந்தால் மக்களிடம் இதனை குழம்பும் வகையில் தூண்டி விடுகின்றனர். ஆனால் மக்கள் மிகவும் நிதானமாக உள்ளார்கள். அபிவிருத்திகள் நலிவடைந்து கிடக்கின்ற காலகட்டத்தில் இவ்வாறான மிகப்பெரிய அபிவிருத்திகள் வருகின்ற பொழுது இவர்கள் யாரும் தடுக்கக் கூடாது என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.

கிழக்கு மாகாண சபையூடாக கோடிக்கணக்கில் செலவு செய்து வருகின்றோம். பாடசாலை மற்றும் வீதி அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தோம். இப்போது முன்னேறி வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் பொதுப்பணி அபிவிருத்திகளை செய்து எங்கள் பணி மேலோங்கி வருகின்றது.

இவ்வாறான விடயங்களை நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற சிந்தனை ஒரு சிலரிடம் உருவாக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் ஒதுக்கிய திட்டங்களுக்கான நிதிகள் அனைத்தையும் முற்றுமுழுதாக நிறைவேற்றியுள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸ் நாட்டுகின்ற கல்லு முளைக்காது என்ற அபிப்பிராயம் நிலவுகின்றது. அவ்வாறான அமைச்சர்கள் முதல் இருந்தார்கள். ஊருக்குள் உழவு இயந்திரத்தில் கல்லை கொண்டு சென்று வைத்துவிட்டு அது அடுத்த தேர்தல் வரை முளைக்கும் என்கின்றனர். இதனால் கெட்ட பெயர் கட்சிக்கே உரியது.

எந்தவித நிதி ஒதுக்கிடும் இன்றி வீட்டிலிருந்து சென்று கல்லை வைத்திட்டு விட்டு இதனை செய்து தருவேன் என்று கூறுகின்றனர். இதனை மக்கள் நம்புகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதி என்பதால் மக்கள் மத்தியில் கசப்பான உணர்வு ஏற்பட்டு விட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் வைக்கும் கல்லு முளைக்காது என்று. இப்போது முஸ்லிம் காங்கிரஸ் வைக்கும் கல்லைத் தவிர வேற எந்த கல்லும் முளைக்காது. நாங்கள் நிதிகளை கொண்டு வந்து வழங்கி விட்டுத்தான் கல்லு வைக்கின்றோம். நிதி வழங்காமல் நாங்கள் செல்வதில்லை. முஸ்லிம் காங்கிரஸின் சக்தி விருச்சமாக வளர்ந்து வருகின்றது.

கிழக்கு எழுச்சியை உருவாக்கினார்கள் அது பலிக்கவில்லை. இப்போது ஓடி ஒழித்து விட்டார்கள். கட்சிக்குள் பிளைவை ஏற்படுத்த முற்பட்டார்கள் அதில் இறைவன் துணையால் தோற்று விட்டார்கள். இந்த சக்தியை வளர்த்த பெருமை கல்குடா தொகுதிக்கு உள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் கிட்டத்தட்ட எட்டாயிரம் மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட வேண்டி இருக்கின்றது என அரசாங்க அதிபர் தெரிவித்தார். அத்தோடு மணல், கிறவல் எடுக்கின்ற பிரச்சனை இருக்கின்றது. இதற்கான நிறந்தர தீர்வினை காண வேண்டும் என்றார்.

LEAVE A REPLY