அபிவிருத்தி செய்வதைவிட்டு நாங்கள் கொண்டு வரும் நிதியில் கல்லு வைப்பதற்குதான் பலருக்கு விரும்பம்: ஹாபீஸ் நஷீர் அஹமட்

0
128

(வாழைச்சேனை நிருபர்)

Naseer Hafisமத்திய அரசியல் இருக்கும் நிதியை கொண்டு அபிவிருத்தி செய்வதைவிட்டு நாங்கள் கொண்டு வரும் நிதியில் கல்லு வைப்பதற்குதான் பலருக்கு விரும்பம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையினால் பிரதேச மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் 2016ம் ஆண்டுக்கான நெல்சிப் திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஓட்டமாவடி பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் சந்தைக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஓட்டமாவடி பிரதேசத்திற்கு பல் அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையிலுள்ள அதிகாரங்களை நன்கு கற்று. மாகாண சபைகளுக்கு எங்கிருந்து நிதி ஒதுக்கப்படுகின்றது என கண்டறிந்து. அதனைப் பெறுவதற்கு 24 மணி நேரங்களும் வேலை செய்து நிதிகளை கொண்டு வந்தால் சில நபர்களுக்கு பிரச்சனை நிலவுகின்றது.

கிழக்கு மாகாண சபையின் கீழ் முப்பத்தெட்டாயிரம் ஊழியர்கள் கடமையாற்றுகின்றது. இவர்களுக்கு வேதனம் வழங்கி வருகின்றோம். முன்னொரு காலத்தில் ஏதும் நடைபெறவில்லையென அரசியல் மாற்றங்களில் கதைக்கப்பட்ட யாதார்த்தங்கள்.

வெள்ளை யானை போன்று நித்திரையில் காணப்பட்ட கிழக்கு மாகாண சபையை எழும்பி ஓடும் நிலைமைக்கு நாங்கள் மாற்றியுள்ளோம். கிழக்கு மாகாண சபையிலுள்ள நிதிகளை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மத்திய அரசாங்கத்தில் மாகாண சபையை விட எழுபத்தைந்து வீதமான பணம் காணப்படுகின்றது. சுகாதார அமைச்சு மாகாண சபைக்கு உட்பட்ட விடயம். மத்திய அரசு எமக்கு 95 வீதம் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. நாங்கள் சண்டைபோட்டு ஆயிரத்து நூறு மில்லியன் சுகாதார துறைக்கு பெற்றுள்ளோம்.

கிழக்கு மாகாணத்திற்கு இன்னும் 1800 மில்லியன் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதைவிட்டு விட்டு நாங்கள் பெற்ற நிதியில் கல்லு வைப்பதற்கு பல பேருக்கு ஆசை. இதை கொண்டு வந்தவனுக்குத்தான் வருத்தம் தெரியும்.

நான் அமைச்சராக இருந்த வேளை கட்டடம் மற்றும் வீதிகளுக்கு ஒதுக்கிய நிதி மூலம் நடைபெற்ற வேலைத் திட்டங்களை திறந்து வைப்பதற்கான நாங்கள் செல்வதற்கு முன்னர் அமைச்சர் தயாகமகே திறந்து விட்டு சென்றுள்ளார்.

சுகாதாரத் துறைக்கு மத்திய அரசால் ஐம்பது பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பெறாமல் உள்ளார். மாகாணத்தில் எங்களுடைய ஆட்சி வருவதற்கு முன்னர் கல்வி துறைக்கு நாற்பது மில்லியன் ஒதுக்கப்பட்டது. தற்போது நாங்கள் ஏழாயிரந்து ஐநூறு மில்லியன் கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசில் ஏழாயிரம் கோடி ரூபாய் சும்மா காணப்படுகின்றது.

மத்திய அரசில் சென்று பணத்தை பெறுங்கள். தெரியா விட்டால் எங்களிடம் கேளுங்கள் எவ்வாறு பெறுவது என்று சொல்லி தருகின்றேன். இவ்விடயத்தை தெரியாமல் இத்தனை காலமும் அரசியல் செய்துள்ளீர்கள்.

கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நிதிகளை வழங்குங்கள் என்று நாங்கள் தைரியமாக கேட்டு பெற்றுக் கொள்கின்றோம். அரசியல் அதிகாரங்களை புரிந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும்.

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் அதிகாரத்திற்காக கையேந்தி பிச்சை எடுத்து நிற்க வேண்டிய தேவை ஒரு போதும் இல்லை. தலை நிமிர்ந்து எங்கள் அரசியல் அதிகாரம் இந்த மண் எங்களுக்குத்தான் சொந்தம்.

எங்கள் வரிப் பணம் எங்களுக்கு திரும்ப தர வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. கையேந்தி பிச்சை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை. இதனை புரிந்து கொண்டு எங்களுடைய அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் கல்குடாத் தொகுதிக்கு தேவையான அனைத்து வேலைத் திட்டங்களையும் நிறைவேற்றுவோம். திட்டமிட்ட சமூகமாக எங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும்.

வாழைச்சேனை பிரதேசத்து தொழிற்சாலையை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை பார்த்து எங்களது நெஞ்சம் வருந்துகின்றது.

ஒவ்வொரு நாளும் அரசியல் கலாச்சாரம் பேசி வீணாக்குகின்ற கலாசாரத்தில் இருந்து சமூகம் விடுபட வேண்டும். இவ்வாறானதால் ஊருக்குள் பிரச்சனை நிலவுகின்றது. இது அரசியல்வாதிகள் சூடுகாய்கின்ற விடயமாகும். அதற்கு மக்கள் தயாராக வேண்டிய அவசியமில்லை.

சமூகத்தின் சிந்தனையில் மாற்றம் பெற வேண்டிய தேவை உள்ளது. தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல் செய்துவிட்டு. ஏனைய காலங்களில் அபிவிருத்தியை செய்யுங்கள். மக்களுக்கு அபிவிருத்திகளே முக்கியம். கல்குடா தொகுதியை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கு எந்தவித அரசியல் பாகுபாடுமின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY