பாடசாலை நூலகங்களுக்கு புனித அல்குர்ஆன் மற்றும் நூல் பிரதிகள் அன்பளிப்பு

0
134

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (8)இலங்கை வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான மனித சேவைகள் நிறுவனத்தினால் மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை நூலகங்களுக்கு புனித அல்குர் ஆன் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மாற்றுப் பிரதிகளும் மற்றும் ஜேர்மன் எழுத்தாளர் முகில்வாணனின் “அமைதியின் புன்னகை” நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை வலுவூட்டல் மற்றும் அபிவிருத்திக்குமான மனித சேவைகள் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளரும் வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தருமான ஏ.டபிள்யூ.எம். பௌஸ், ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல். மஹ்ரூப் உட்பட அதன் அலுவலர்களும் பாடசாலை நூலகத்தக்குப் பொறுப்பான அலுவலர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY