மோட்டார் சைக்கிளுடன் மாடு மோதியதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் படுகாயம்

0
96

(அப்துல்சலாம் யாசீம்)

e0aea4e0aebfe0aeb0e0af81e0ae95e0af8be0aea3e0aeaee0aeb2e0af88-e0aeaae0af8ae0aea4e0af81-e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0ae9aதிருகோணமலை-மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மாடு மோதியதில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் இன்று (31) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கஹடகஸ்திகிலிய- தஹனக்வெவ பகுதியைச்சேர்ந்த அப்துல்கபூர் ஆசிதீன் (36 வயது) மனைவியான சீனித்தம்பி றஹ்மாபீவி (34வயது) மற்றும் மகள் ஏ.தன்சீரா (07வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-குச்சவௌி பிரதேசத்திலிருந்து இன்று காலை கோமரங்கடவெல வீதியூடாக வந்து கொண்டிருந்த போது மயிலவெவ பகுதியில் மாட்டுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாட்டுடன் மோதிய நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY