பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

0
124

201606081100132651_earthquake-on-the-seabed-in-Mexico-people-running-in-panic_SECVPFபசிபிக் பெருங்கடலின் தென்மேற்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூ பிரிட்டன் தீவில் இருந்து வடகிழக்கே சுமார் 89 கிலோமீட்டர் தூரத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 499 ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், பப்புவா நியூ கினியாவின் ரபவுல் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை கடுமையாக தாக்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதையும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY