சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்

0
122

201608311159534514_Tremors-rock-parts-of-China-Pakistan_SECVPFசீனாவின் சிச்சுவான் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை உண்டான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ள நிலையில், பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் நேற்று பின்னிரவு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வு அருகாமையில் உள்ள நான்கானா சாஹிப், கசுர், ஷேக்புரா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.

அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுமோ? என்ற பீதியில் மக்கள் வீடுகளைவிட்டு வீதிக்கு ஓடிவந்து, இரவுப் பொழுதை அங்கேயே கழித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விரு நிலநடுக்கங்களால் உண்டான சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY