10 வருடங்களுக்கு மேலாக ஓட்டை உடைசல்களோடு காணப்பட்ட விளையாட்டு மைதானக் கூரையை மாற்ற முதலமைச்சர் 10 நிமிடத்தில் நடவடிக்கை

0
142

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

unnamed (2)கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஓட்டை உடைசல்களோடு காணப்பட்ட மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு மைதானக் கூரையை மாற்றி புதிய கூரையை பொருத்துமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் 10 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெற் சுற்றுப்போட்டி ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வுக்கு சென்றிருந்த முதலமைச்சர் விiயாட்டு மைதானக் கூரை ஓட்டையும் உடைசலுமாக இருப்பதை அவதானித்து விட்டு 10 நிமிடங்களில் இந்தக் கூரையை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அங்கிருந்தவாறே பணிப்புரை விடுத்தார்.

இந்தப் பணிப்புரைக்கமைவாக செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 30, 2016) கூரையை அகற்றும் வேலைகள் துரிதமாக இடம்பெறத் துவங்கியுள்ளன.

இந்த கூரைமாற்றும் வேலைத் திட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை மூலம் ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடகாலமாக ஓட்டையும் உடைசலுமாக உள்ள இந்த விளையாட்டு மைதானக் கூரையின் கீழ் அமர்ந்து பல அரசியல்வாதிகள்; நிகழ்ச்சிகளில் அதிதிகளாகக் கலந்து விட்டுச் சென்றிருப்பதாகவும் ஆனால் விளையாட்டு மைதானக் கூரையை மாற்ற எதுவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை எனவும் அந்த விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் விளையாட்டுக் கழகங்கள் தெரிவித்துள்ளதோடு உடன் நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY