விஷேட பயிற்சிகளை நிறைவுசெய்த 51 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

0
189

(வாழைச்சேனை நிருபர்)

01கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் படித்து விட்டு தொழில் அற்று இருக்கும் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் வழிகாட்டலில் பல்வேறு தொழில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஐம்பத்தொரு (51) இளைஞர் யுவதிகளுக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், தையல் பயிற்சி, கேக் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு பயிற்சிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், ஐ.எம்.ஓ. நிறுவனம் மற்றும் பிறன்டினா நிறுவனத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி நெறிகளுக்கான நிதி அனுசரனையினை ஐ.எம்.ஓ. நிறுவனம் மற்றும் பிறன்டினா நிறுவனம் என்பன வழங்கி இருந்தன.

1 2 3 4

LEAVE A REPLY