திலகரத்ன டில்ஷானுக்கு பதிலாக சச்சித் பத்திரன இணைப்பு

0
108

sajith-1அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இணைக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான்காவது போட்டி தம்புளையில் நாளை பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

போட்டிக்கான இரண்டு அணிகளின் வீரர்களும் இன்று பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெற்ற திலகரத்ன டில்ஷானுக்கு பதிலாக, சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டதாக அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவருடன் ஆலோசித்து நாளைய போட்டிக்கான இறுதி அணியை தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

LEAVE A REPLY