ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் ஹேல்ஸ்

0
139

201608302153365112_Hales-becomes-the-highest-ODI-score-by-an-England-batsman_SECVPFஇங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். 15 ரன்கள் எடுத்த நிலையில் ராய் அவுட் ஆனார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். ஜோ ரூட் உடன் இணைந்து ஹேல்ஸ் அதிரடியாக விளையாடினார்.

ஹேல்ஸ் 55 பந்தில் அரை சதமும், 83 பந்தில் சதமும் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 171 ரன்கள் சேர்த்தார். 122 பந்தில் 22 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் இந்த ரன்னைக் குவித்தார்.

171 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் ராபின் ஸ்மித் கடந்த 1993-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவுட்டாகாமல் 167 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்தின் தனிநபர் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ஹேல்ஸ் 171 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஸ்மித் 163 பந்தில் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 167 ரன்கள் சேர்த்தார்.

ஜேசன் ராய் 162 ரன்களுடன் 3-வது இடத்திலும், கோவர் 158 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளார். ஸ்டார்ஸ் 158, 154 மற்றும் 152 ரன்களுடன் முறையே 5 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

LEAVE A REPLY