10 வருட இலங்கையின் சாதனை இங்கிலாந்திடம்

0
176

Eng Vs Pak Highest ODI Scorஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. 3வது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியினர் துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரன் மழை பொழிந்தனர்.

இப்போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹாலஸ் 122 பந்துகளுக்கு 171 ரன்களை குவித்து அசரவைத்தார். மேலும் ஜோ ரூட் 85 ரன்களும், ஜோஸ் பட்லர் 90 ரன்களும் எடுத்து அணிக்கு பலமான ரன்களை சேர்க்க துவங்கினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 2006ம் ஆண்டு இலங்கை அணி 443 ரன்கள் அடித்ததே ஒரு நாள் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து நிகழ்த்தியுள்ள புதிய சாதனை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

LEAVE A REPLY