(Poem) கூரை

0
34

(நிஷவ்ஸ்)

வானத்திலிருந்து
வாழ்க்கையைக் காக்க
எட்டிய உயரத்தில்
இருக்கின்ற firewall.
காகங்களின்
கன்டீன்.
பாயும் குரங்குகளின்
பாராளு மன்றம்
காற்றாடி அனுப்ப
வீட்டிலொரு கடற்கரை.
அடுத்த வீட்டை நோக்க
ஆதி கால டெக்னிக்.
ஓலைக் கூரை
ஒழுகும்.
ஓட்டுக் கூரை
உடையும்.
தகரக் கூரை
தகிக்கும்.
சீற் கூரை
சீற்ற நோய் தரும்.
சிலப் கூரை
செலவதிகம்.
கூரை பற்றி
கூராய் கருத்துக்கள்.
ஏழைக் கூரை
மழையில் அழும்.
நடுத்தரக் கூரை
இடைக்கிடை
இயலாமையை
இயம்பும்.
வானமே கூரையாய்
வாழும் மக்களை
காணும் போதெல்லாம்
கண்ணீர் முட்டும்.

LEAVE A REPLY