(Poem) சில கேள்விகள்

0
50

(நிஷவ்ஸ்)

தனிப் பள்ளி அமைப்பதுதான்
தலையாய கடமையா?
இனிப்புள்ள நிலையினிலா
இருக்கிறது இச் சமூகம்?
இனிப் பிள்ளை படிக்க
இல்லை பணம் என்று
தவிக்கின்ற மனங்களுக்கு
தரலாமே அப்பணத்தை?

ஆவேசம் மிகக் கொண்டு
அடிக்கின்ற ஆசாமி!
ஏன் வேசம் போடுகிறாய்?
இந்தக் கோபத்தை
துவேசம் கொண்டோர் முன்
துணிச்சலாய்க் காட்டுவாயா?
தொழுபவனுக்கு அடிப்பதுதான்
தூய நபி வழியா?

அடிப்பதை ரெகோர்ட் செய்து
அப்லோட் செய்தவரே!
அடிப்படைகள் விளங்காது
அவசரப் பட்டது ஏன்?
கடும்பகை கொண்டிருக்கும்
காபிர்கள் சில பேர்கள்
தொடுக்கின்றார் கேள்விகள்
தொப்பி தாக்கும் படம் காட்டி!

இரு பக்க உலமாவும்
ஏட்டிக்குப் போட்டியாய்
குர் ஆனின் வசனத்தை
குறிப்பிட்டு பேசுகிறார்.
ஒற்றுமையை வலியுறுத்தி
ஒரு வசனம் என்றாலும்
கற்ற குர் ஆனில்
காண இல்லையோ நீர்?

எல்லாத் தெளஹீதும்
இழிவென்று fb யில்
பொல்லாத பழிகூறும்
போராளிக் கூட்டமே!
தப்லீகில் ஓரிருவர்
தவறாகத் தாக்கியதால்
அப்பழிக்கு இயக்கத்தை
அசிங்கமாக்கும் சிங்கங்களே!
ஒரு வேலை தவறென்றால்
ஓரிருவர் பிழையென்றால்
குறை கூறி அமைப்புக்களை
குதறுவதுதான் நபி வழியா?

தூர நோக்கோடு
தூயமையான உளத்தோடு
யாரும் சிந்தித்தால்
இது போன்ற சிக்கல்கள்
நேராமல் தடுக்கலாம்
நிறைவைக் கொடுக்கலாம்

LEAVE A REPLY