எப்போது சிசேரியன் அவசியம்? அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய உண்மைகள்!

0
98

vUmMqUIp800x480_IMAGE57334404பிரசவத்தின் போது சில மருத்துவ நிலை அல்லது சிரம்மங்கள் ஏற்படும் வகையில், வலுவான காரணம் இருந்தால் மட்டுமே சிசெரியம் அவசியம்.

ஆனால், நாம் பிரசவலி வந்தாலே பயந்து சிசேரியன் செய்ய ஒப்புதல் கூறிவிடுகிறோம். சிசேரியன் செய்தால் லாபம் என்பதால் பல தனியார் மருத்துவமனைகளும் சிசேரியன் செய்ய வைக்க தான் முயற்சி செய்கின்றனர்.

உண்மையில் எந்தெந்த நிலைகள் நேர்ந்தால், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறித்து குழந்தை பெற்றுக்கொள்ளவிருக்கும் தம்பதிகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பணம் போனால் போகட்டும் என நினைப்பவர்கள், சுகப்பிரசவத்தை விட, சிசேரியன் தான் பிரசவத்திற்கு பிறகு அதிக வலி மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

பிரசவ வலி தாமதம் ஆவது, பிரசவத்திற்கு குறித்த நேரம் வரை பிரசவ வலியே இல்லாமல் இருப்பது. குழந்தையின் இதயத்துடிப்பு குறைய துவங்குவது அல்லது குறைந்து காணப்பட்டால். தொப்புள்கொடி குழந்தையை சுற்றி இருந்தாலோ, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டரியப்பட்டாலோ. குழந்தை இயல்பான எடைக்கு அதிகமாக இருந்தாலோ, உருவத்தில் பெரிதாக இருந்தாலோ.தாயின் கருவறையில், குழந்தை சிக்கலான நிலையில் இருந்தால்.இரட்டை குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேலான எண்ணிக்கையில் இருந்தால்.தாய்க்கு பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால். கர்ப்பப்பை வெடிப்பு / பிளவு (Uterine rupture) ஏற்பட்டிருந்தால்.

LEAVE A REPLY