உடும்பை தம்வசம் வைத்திருந்த நபருக்கு ஆறு மாதத்திற்கு சிறைதண்டனை

0
146

(அப்துல்சலாம் யாசீம்-)

arrested2உடும்பை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு தண்டப்பணமாக நீதிமன்றத்திற்கு 23 ஆயிரம் ரூபாயினை செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அப்பணத்தை செலுத்தாமல் வழக்கு தவனைக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகிய நபரை இன்று (30) முதல் ஆறு மாதத்திற்கு சாதாரண சிறைதண்டனை வழங்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வானந்த பெர்ணான்டோ சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-மொறவெவ-டி 05 பகுதியைச்சேர்ந்த சுப்பரமணியம் ரொபட் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2014ம் ஆண்டு 02ம்மாதம் 15ம் திகதி பன்குளம் பகுதியில் உடும்பொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றத்தில் மொறவெவ பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர் கடந்த 2016-06-16ம் திகதி இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போது தான் உடும்பை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

அதனையடுத்து நீதிமன்ற நீதவான் 2016-08-23ம் திகதிற்குள் தண்டமாக விதிக்கப்பட்ட 23 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரிடம் தெரிவத்தும் அப்பணத்தை நீதிமன்றத்திற்கு செலுத்தாமல் வழக்கு தவனைக்கு சமூகமளிக்காதமையினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதேவெளை தலைமறைவாகியிருந்த இவரை கைது செய்து நேற்று (30) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY