தொகுதி முறை தேர்தல் வருமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியைக் கூட பெற முடியாது – பிரதியமைச்சர் அமீர் அலி

0
251

(விசேட நிருபர்)

Min. Ameer Aliதொகுதி முறை தேர்தல் வருமாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியைக் கூட பெற முடியாது என கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

காத்தான்குடியில் திங்கட்கிழமை இரவு (29.8.2016) சமூக சேவை நிறுவனங்களுக்கு தளர்பாடங்களை கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தொகுதிமுறையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமாயின் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறமுடியாது

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு மற்றும் கல்குடா ஆகிய தொகுதிகளிலும் மட்டக்களப்பு தொகுதியிலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுவார்கன்

அதே போன்று மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியென்றாலும் அதிலும் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியாது.

மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசப்படும்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் காத்தான்குடி ஏறாவூர் கல்குடா என்ற வேறுபாடின்றி ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ள முடியும்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் கதிரை என்பது இறுதியான கதிரையாகும். பொறுத்திருந்து பாருங்கள் அடுத்த மாகாண சபையில் அவருக்க முதலமைச்சர் பதவி கிடைக்கப் போவது கிடையாது.

இனி வரப்போகின்ற கிழக்கு மாகாண சபையில் சிறிலங்கா சதந்திதரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒன்றினைந்து ஒன்றுபட்ட அரசியல் இந்த மாகாணத்தில் நடைபெறப் போகின்றது

எப்படி பாராளுமன்றத்தில் இருக்கின்றதோ அதே போன்றுதான் கிழக்கு மாகாண சபையிலும் எலN;லாரும் ஒன்று சேர்ந்து மஹிந்த அணியைத்தவிர அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரே அணியாக இருக்கும்.

எனவேதான் தந்போதைய முதலமைச்சருக்கு அடுத்த முதலமைச்சர் பதவி என்ற சந்தர்ப்பம் கிடைக்காது. முன்னாள் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

நாங்களும் இவ்வளவு காலமும் அரசியல் செய்கின்றேனம்.கௌரவமாக அரசியல் செய்கின்றோம் கேவலமான அரசியல் செய்ய வில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சரின் கேவலமான அரசியல் கலாசாரத்தினை நாங்கள் காணவில்லை.

எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் அரசியலில் பாரிய மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம் பெறும். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான அலை திரண்டு நிற்கும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமென எதிர் பார்;க்கப்படுகின்றது. அடுத்த மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போதே அதிகமாக ஓடத்தொடங்கியுள்ளனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்ன செய்து வருகின்றது என்றால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை ஓட வைத்துள்ளது.

அதன் தலைவர் றஊப் ஹக்கீமை அடிக்கடி அம்பாறைக்கு ஓடச் செய்துள்ளதுடன் சின்ன பொட்டிக்கடைக்குள் இருந்து தேனீர் அருந்தவும் வைத்துள்ளது.

மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் அடிக்கடி முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஓடி வருவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்து வைத்துள்ளது.

அமைச்சர் றிசாட் பதியுதீன் அம்பாறைக்கு போகின்றார் என்றால் பின்னால் தனது பெயரையும் போடுவதற்காக றஊப் ஹக்கீம் ஓடிப்போகின்றார்.

ஒவ்வொரு மாதமும் முஸ்லிம் காங்கிரஸ் தவைரை அம்பாறை மாவட்டத்திற்கு வர வைத்த பெருமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாட் பதியுதீனையே சாரும் என்றார்.

இதன் போது சென்றளைட் மாணவர் ஒன்றியத்திற்;கு ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தளர்பாடங்கள் மற்றும் முகைதீன் மீனவர் சங்கத்pதிற்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தளர்ப்பாடங்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டிலிருந்து வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY