கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரினால் அட்டாளைச்சேனை, ஆலம்குளம் பிரதேசத்திற்கு புதிய வைத்தியசாலை…!!

0
136

-சப்னி அஹமட்-

unnamed (9)அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குளம் பிரதேசத்தின் நீண்டநாள் மக்கள் குறையாக காணப்பட்ட வைத்தியசாலை குறையினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல் முஹம்மட் நசீர் அதிரடி நடவடிக்கையினால் தீர்த்து வைத்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியில் ஆலம்குளம் பிரதேசத்திற்கு மிக அத்தியவசியமாக காணப்பட்ட வைத்தியசாலை அமைப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்கும் செயற்றிட்டத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டு கட்டிடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி திட்டத்தினை அதிரடியாக மேற்கொண்ட அமைச்சர் ஆலம்குளம், சம்புநகர் மக்களின் பல நாள் கோரிக்கையாகவும், இந்த பிரதேதத்தின் மக்கள் தங்களது நோய்களை குணப்படுத்த வேண்டிய நேரங்களில் குறித்த பிரதேச மக்கள் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு மிகவும் கஷ்டத்திற்கு மத்தியிலயே செல்ல வேண்டியது இதனை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் கிழக்கு மாகாண வைத்திய பணிமனைக்குழு மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டனர்.

LEAVE A REPLY