வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம்

0
134

(அஷ்ரப் ஏ சமத்)

unnamed (5)வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம் இன்று(30)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறையில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளா் திருமதி டப்ளியு, கே. கே. அத்துக்கோரல – ஹெப்பிடாட் இலங்கைக்கான பிரநிதி சிறினிவாச புரி, க்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைச்சா்த்திடப்பட்டது. கடந்த 1978ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வீடமைப்பு அமைச்சினோடு இணைந்து தேசிய வீடமைப்புக் கொள்கை, தொழில்நுட்ப ஆலோசனை, கொழும்பின் வரைபடம், அரசின் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டங்களுக்கு சமுக பயண்பாடுகளுக்கும் ஹெபிட்டாட் இயங்கி வருகின்றது.

எதிா்காலத்தில் விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு திட்டங்களுக்கு ஜக்கிய நாடுகள் வீடமைப்பு அமையம் உதவ உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்ட ஜக்கிய நாடுகள் ஹெபிட்டாட் திட்டம் இலங்கை மட்டும்ல்ல, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் மனித குடியிருப்புக்கு உதவி வருகின்றதாக இலங்கைப் பிரநிதி சிரினிவாச புரி தெரிவித்தாா்.

unnamed (6)

LEAVE A REPLY