அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையத்தின் பெண்களுக்கான போட்டி

0
192

(ஷபீக் ஹுஸைன்)

unnamed (3)ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடாத்தும் கிராஅத் போட்டியில் இரண்டாவது நாளான திங்கட்கிழமை (29) பெண்களுக்கான போட்டி கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில்நடைபெற்றது.நடுவர் குழாம்களில் உள்நாட்டு நடுவர்களுடன் வெளிநாட்டு காரிகளான நடுவர்களும் இடம்பெற்றனர். பெண் காரியாக்கள் சிலரும் போட்டி நடுவர்களாகப் பணிபுரிந்தனர். முன்னதாக ஆண்களுக்கான கிராஅத் போட்டிகள் திங்கள்கிழமை இடம்பெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடெங்குமிலிருந்து வந்திருந்த 250 பேர் வரையிலானபெண் போட்டியாளர்கள் 7 குழுக்களாக, 25 உள்நாட்டு, வெளிநாட்டுநடுவர்குழாம்களின் முன்னிலையில் இனிமையான தொனியில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தனர். இவர்களில்20 வயதுக்கு குறைந்தர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்,முன்னர் சர்வதேச கிராஅத் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் என மூன்று பெண்கள் பிரிவினர்களுக்கான போட்டிகள் வௌ;வேறாக நடைபெற்றன. இப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். தொடர்ந்து பெண்களுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றது.

போட்டிகளின் முடிவில் வெற்றிபெற்றவர்களை அறிவிக்கும் நிகழ்வு “தாருஸ்ஸலாம்” கேட்போர் கூடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நடுவர்களான காரிமார்கள் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்றது. போட்டிகளின் இறுதிச் சுற்றில்வெற்றிபெற்றவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்த தினமான செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்றுகொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடத்தப்படவுள்ள பிரதானநிகழ்வின் போது திருக்குர்ஆனை இனிமையாக ஓதுவர். அவர்களுக்கு மிகப் பெறுமதியான பரிசில்களும்; வழங்கப்படவுள்ளன.

LEAVE A REPLY