கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம்

0
132

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed (1)காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இன்று (30) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் படுகொலைகளுக்கும்- வன்முறைகளுக்கும் உள்ளானோரின் குடும்பங்கள்- கிராமிய பெண்கள்- கிராமிய சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களே இணைந்து நடாத்தின.

இதில்இ மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்த 150 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். எமது உறவுகளைத் தேடித்தாருங்கள்- சர்வதேச பொறிமுறையை அமுல் செய்யுங்கள்- மாவட்டங்களில் அலுவலகங்கள் நிறுவப்பட வேண்டும்- இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகாழாமையை உறுதிப்படுத்துங்கள் போன்ற பல கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இறுதியில் ஆளுநரிடம் சமர்பிக்க மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டன.

LEAVE A REPLY