விரல் முறிந்ததால் இலங்கையில் இருந்து சொந்த நாடு திரும்புகிறார் ஷேன் மார்ஷ்

0
99

201608301849445622_Injured-Shaun-Marsh-to-fly-home-from-Sri-Lanka_SECVPFஇலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-ல் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்புல்லாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஷேன் மார்ஷ் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது பந்து தாக்கி அவரது இடது கை சுண்டு விரல் முறிந்தது. இதனால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியா கிளம்புகிறார்.

மார்ஷ் காயம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபி டாக்டர் கூறுகையில், ‘‘மார்ஷ் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் அவதிப்பட்டார். இதனால் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. அப்போது சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. ஆகவே, அவர் உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்’’ என்றார்.

மார்ஷ் அணியில் இடம்பெறாததால், டி20 அணியின் கவாஜா சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ள கவாஜா, மூன்று போட்டிகளில் களம் இறங்கவில்லை. தற்போது மார்ஷ் இல்லாததால் நாளை நடைபெற இருக்கும் நான்காவது போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY