அணித் தலைவராக இருந்தபோது ஆதரவு கிடைக்கவில்லை!- திலக்­க­ரட்ண டில்ஷான்

0
198

இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக தான் பதவி வகித்­த­போது முன்னாள் வீரர்­க­ளி­னதும் சம­கால வீரர்கள் சில­ரி­னதும் செயற்­பா­டுகள், குறிப்­பாக ஏஞ்­சலோ மெத்யூஸ், குறித்து திலக்­க­ரட்ண டில்ஷான் குறை­கூ­றி­யுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக தம்­பு­ளையில் நடை­பெற்ற மூன்­றா­வது போட்­டி­யுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்னர் அணித் தலை­வ­ராக தான் எதிர்­கொண்ட சவால்­களை அவர் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக 2011 ஏப்ரல் முதல் 2012 ஜன­வ­ரி­வரை பதவி வகித்த பத்து மாத காலப்­ப­கு­தியில் பல சவால்­களை எதிர்­கொண்­ட­தா­கவும் சக வீரர்கள் சில­ரி­னது ஆத­ரவு கிடைக்­க­வில்லை எனவும் திலக்­க­ரட்ண டில்ஷான் தெரி­வித்தார். தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­வகை கிரிக்கெட் தொடர்­க­ளுக்குப் பின்னர் திடீ­ரென அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து தான் நீக்­கப்­பட்­டதால் மனம் நொந்­து­போ­ன­தா­கவும் அவர் கூறினார்.

தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான இரு­வகை தொடர்­க­ளிலும் இலங்கை தோல்வி அடைந்­த­போ­திலும் தென் ஆபி­ரிக்­காவை ஒரு டெஸ்ட் போட்­டியில் அதன் சொந்த மண்ணில் இலங்கை முதல் தட­வை­யாக வெற்­றி­கொண்­டி­ருந்­தது. ‘‘அணித் தலைவர் பத­வியை ஏற்கும் எண்ணம் எனக்கு இருக்­க­வில்லை.

ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் அப்­போ­தைய தலைவர், புதிய தலைவர் ஒரு­வரைத் தெரிவு செய்யும் வரை 6 மாதங்­க­ளுக்கு அணித் தலைமைப் பத­வியை ஏற்­கு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தற்கு அமைய நான் ஒப்­புக்­கொண்டேன். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக திற­மை­வாய்ந்த இரண்டு பந்­து­வீச்­சா­ளர்­களை அப்­போது இழந்­தி­ருந்தோம்.

முர­ளி­தரன் ஓய்வு பெற்­றி­ருந்தார். நுவன் குல­சே­கர, அஜந்த மெண்டிஸ் ஆகிய இரு­வரும் உபா­தையால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதன் கார­ண­மாக பந்­து­வீச்சில் சிறந்­த­வர்­களை நான் கொண்­டி­ருக்­க­வில்லை’’ என்றார் டில்ஷான்.

ஏஞ்­சலோ மெத்யூஸ் உபாதை கார­ண­மாக பந்து வீச்சில் ஈடு­ப­ட­வில்லை. அது எனது துர­திர்ஷ்­ட­மாக இருந்­தி­ருக்­கலாம். ஆனால், நான் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொண்ட பின்னர் ஒரு வாரம் கழித்து இலங்கை அணி அவுஸ்­தி­ரே­லியா சென்­றது.

அங்கு மெதயூஸ் பந்­து­வீச ஆரம்­பித்தார். அது ஒரு­வேளை அணித் தலைவர் மஹே­லவின் அதிர்ஷ்­டமாக இருந்­தி­ருக்­கலாம்’’  என டில்ஷான் குறிப்­பிட்டார்.

டில்ஷான் அணித் தலை­வ­ராக பதவி வகித்த காலத்­திலும் பார்க்க மஹேல அணித் தலை­வ­ராக பதவி வகித்த காலத்தில் மெத்யூஸ் தாரா­ள­மாக பந்­து­வீ­சி ­யி­ருந்­தமை பதி­வே­டுகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. ‘‘தென் ஆபி­ரிக்­கா­வுக்­கான கிரிக்கெட் தொடர் முடிவில் சக­ல­தையும் மறந்­து­விட்டு அவுஸ்­தி­ரே­லியா சென்றேன். தனிப்­பட்ட கோப­தா­பங்கள் எனது கிரிக்­கெட்டை பாதித்­து­வி­டக்­கூ­டாது என்­பதில் குறி­யாக இருந்தேன்.

இதன் கார­ண­மாக அங்கு 500 ஓட்­டங்­க­ளுக்கு மேல் குவித்து தொடர் நாயகன் ஆனேன். எனது அணித் தலைவர் யார் என்­பது குறித்து நான் கவ­லைப்­ப­ட­வில்லை. என்னை அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்க யார் காரணம் என்­பது பற்றி நான் அக்­க­றை­கொள்­ள­வில்லை. நான் தேசத்­திற்­கா­கவே என்றும் விளை­யா­டினேன். ஆனால் நான் அந்த சந்­தர்ப்­பத்தில் நோக­டிக்­கப்­பட்டேன்’’ என்றார் டில்ஷான்.

நடப்பு டெஸ்ட் தொட­ருக்கு முன்னர் ஓய்வு பெறு­வது குறித்து நான் சிந்­திக்­க­வில்லை. என்னை யாரா­வது விளை­யா­டு­மாறு அல்­லது ஓய்­வு ­பெ­று­மாறு கூறினால் அதனை நான் பொருட்­ப­டுத்­த­மாட்டேன்.

அது எனக்கு முக்­கி­ய­மல்லை. நான் என்னை நினைக்­கின்றேன் என்­பதே முக்­கியம். இந்தத் தொடர் ஆரம்­ப­மா­ன­போது குறைந்­தது இரு­பது 20 கிரிக்­கெட்­டி­லா­வது இன்னும் ஒரு வருடம் விளை­யா­ட­வேண்டும் என எண்­ணினேன். ஆனால் 25ஆம் திகதி காலை கண்­வி­ழித்­த­போது எல்லாம் போதும் என்­பதை உணர்ந்தேன்’’  என அவர் மேலும் தெரி­வித்தார்.

‘‘உண்­மையைக் கூறு­வ­தானால், என்னால் இன்னும் ஒன்று அல்­லது இரண்டு வரு­டங்­க­ளுக்கு விளை­யாட முடியும். ஆனால் எதிர்­காலம் குறித்து சிந்­திக்க வேண்டும்.

இன்னும் இரண்டு வரு­டங்கள் விளை­யா­டி­விட்டு நான் ஓய்வு பெற்றால் அடுத்த உலகக் கிண்­ணத்­திற்கு 18 மாதங்­களே மீத­மி­ருக்கும்.  அது மற்­றை­ய­வர்­க­ளுக்கு அநீ­தி­யாக அமைந்­து­விடும்.

இளம் வீரர் ஒரு­வ­ருக்கு வாய்ப்பு வழங்­கலாம். ஆறு வரு­டங்­க­ளுக்கு ஆரம்ப வீர­ராக விளை­யாட ஆரம்­பித்த என்­னுடன் சுமார் 10 பேர் ஆரம்ப வீரர்­க­ளாக ஜோடி சேர்ந்­தனர்.

எனக்கு நிரந்­தர ஜோடியை இனங்­காண முடி­யாமல் போய்­விட்­டது. அது பிரச்­சி­னை­யான ஒரு விடயம். நான் தொடர்ந்து விளை­யா­டினால் ஆரம்ப வீரர்­க­ளாக இரு­வரை நிரந்­த­ர­மாக்க முடி­யாது. எனவே நான் ஓய்வு பெறு­கின்றேன்’’  என திலக்­க­ரட்ண டில்ஷான் குறிப்­பிட்டார்.

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்வு பெற்ற டில்ஷான், அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யுடன் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து முழு­மை­யாக விடை­பெ­ற­வுள்ளார்.

330 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டிய டில்ஷான் 303 இன்­னிங்ஸ்­களில் துடுப்­பெ­டுத்­தாடி 22 சதங்கள், 47 அரைச் சதங்கள் அடங்கலாக 10,290 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குமார் சங்கக்கார (14,234), சனத் ஜயசூரிய 13,438), மஹேல ஜயவர்தன (12,650) ஆகியோருக்கு அடுத்து 10,000 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது இலங்கையர் டில்ஷான் ஆவார்.

பந்துவீச்சில் 204 இன்னிங்ஸ்களில் 106 விக்கெட்களை கைப்பற்றியதுடன், 123 பிடிகளையும் எடுத்துள்ளார். அவ்வப்போது விக்கெட் காப்பிலும் ஈடுபட்ட டில்ஷான் ஒரு ஸ்டம்ப்பும் செய்துள்ளார்.

 

LEAVE A REPLY