ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் 18 வயது இளைஞர் கைது

0
103

arrested2(வாழைச்சேனை  நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காயர் வீதியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (29.08.2016) இரவு 07.30 மணியளவில் கைது செய்யபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

குறித்த இளைஞர் கஞ்சாவுடன் நடமாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞரின் நடமாட்டத்தை பின் தொடர்ந்த போது ஏறாவூர் காயர் வீதியில் வைத்து 2560அப கஞ்சாவுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுளார்.

சந்தேக நபரான இளைஞர் கிராம கோட் வீதி ஏறாவூர் – 06ரைச் சேர்ந்தவர் என்றும் 18 வயதுடைய இளைஞரான இவரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக விசாரனைக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY