ஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய மற்றொருவரும் சிக்கினார்

0
85

hackஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவி (Hacking) அதிலிருந்த தரவுகளை மாற்றியதாக கூறப்படும் மற்றுமொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு 26 வயதாகும். இதேவேளை, நேற்றையதினம் கடுகன்னாவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் தொடர்பில் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இரு சந்தேகநபர்களையும் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY