440 மில்லிகிரேம் ஹெரோயினுடன் ஒருவர் தம்பலகாமத்தில் கைது

0
21

(அப்துல் சலாம் யாசீம்)

Arrestதிருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் 440 மில்லிகிரேம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (29) கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை 04ம் கட்டை பகுதியைச் சேர்ந்த தெனகம விதாரன படபெதிகே உபுல் அனுறுத்த (42 வயது) எனவும் தெரிய வருகின்றது.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஜெயபுர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றி வளைத்த போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY