புறா பிடிக்கச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி வபாத் (இன்னாலில்லாஹ்)

0
220

(அப்துல் சலாம் யாசீம்)

Kinniya bridgeகிண்ணியா குட்டிக்கராச்சி இஹ்ஸானிய்யா மகளிர் வித்தியாலயத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் நேற்றிரவு (29) 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-இடிமன் பகுதியைச்சேர்ந்த அப்துல் ஹஸன் நிஸாம் (26 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலைக்குள் மூன்று பேர் புறா பிடிக்க சென்ற போது இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஜனாஸா தற்பொழுது கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY