19வயது இளைஞன் கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை

0
169

(அப்துல்சலாம் யாசீம்-)

Dead-body-in-morgue-006திருகோணமலையிலிருந்து -கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் இன்றிரவு (29) 7-30 மணியளவில் இளைஞனொருவன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்-புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த சிவஞானம் வடிவேல் அனோஜன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்பொழுது கன்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY