மின்னல் தாக்கத்தினால் ஒரே நேரத்தில் 300 இற்கும் மேற்பட்ட கலைமான்கள் பலி – நோர்வேயில் சம்பவம்

0
203

-எம்.ஐ.அப்துல் நஸார்-

Displaying 37ADB30200000578-3763329-Some_323_dead_wild_reindeers_struck_by_lightning_are_seen_litter-a-10_1472473296718.jpgமத்திய நோர்வேயில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் ஒரே நேரத்தில் 300 இற்கும் மேற்பட்ட கலைமான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வழமைக்கு மாறான இயற்கை அனர்த்தம் என அதிகாரிகள் வருணித்துள்ளனர்.

70 கலைமான் குட்டிகள் உட்பட 323 கலைமான்கள் பலியானதாகத் தெரிவித்துள்ள நோர்வே நாட்டின் சுற்றாடல் முகவர் நிலையம் இறந்த நிலையில் ஹாடென்ஜெர்விட்டா மலைப்பாங்கான பிரதேசத்தில் விழுந்;து கிடக்கும் கலைமான்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

கலைமான்களும் ஏனைய வனசீவராசிகளும் மின்னல் தாக்கத்தினால் இறப்பதென்பது புதியதொரு விடயமல்ல என சுற்றாடல் முகவர் நிலையத்தின் பேச்சாளர் ஜார்டன் நஸ்டன் தெரிவித்தார். எவ்வாறெனினும், இத்தனை பெருந் தொகையில் இறப்புக்களின் எண்ணிக்கையினை கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும் என அந்த முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரே தடவையில் இத்தனை பெருந்தொகையான கலைமான்கள் எவ்வாறு பலியாகின? என வினவியபோது மோமான வானிலையின் போது அனைத்தும் ஒன்று கூடி ஒரே இடத்தில் குழுமி இருந்தமையே இதற்குக் காரணமாகும் என ஜார்டன் நஸ்டன் தெரிவித்தார்.

பருவ காலங்கள் மாற்றமடையும்போது ஆயிரக்கணக்கான கலைமான்கள் ஹாடென்ஜெர்விட்டா மலைப்பாங்கான பிரதேசத்தை கடந்து செல்வது வழககமாகும்.

வரலாற்றில் இத்ததனை கலைமான்கள் பலியாகி இருப்பது இதுவே முதல்தடவையாகும் என இணையத்தளம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பால் பண்ணையொன்றில் மின்னல் தாக்கத்தினால் 2005 ஆம் ஆண்டு 68 பசுக்கள் கொல்லப்பட்டமையே இது வரை உலக சாதனையாக உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY