ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய 17 வயது மாணவனின் நிலை இதுதான்

0
151

Captureஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய 17 வயதுடைய பாடசாலை மாணவனை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப்பிரிவினர் இன்று (29) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவன் கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் இணையத்தளம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மாணவனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், மாணவனை நாளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

LEAVE A REPLY