நடுவானில் என்ஜின் உடைந்தது: 99 பயணிகளுடன் அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்

0
89

201608291634592098_engine-torn-apart-midair-us-flight-makes-emergency_SECVPFஅமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் விமானம் கடந்த சனிக்கிழமை காலை நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து புளோரிடாவின் ஆர்லாண்டோ நகரத்துக்கு புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதை உணர்ந்த விமானி விமானத்தை அவசரமாக திசைதிருப்பி, புளோரிடா மாநிலம் பென்ஸகோலா நகர விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.

விமானத்தின் இரண்டு என்ஜின்களில் ஒரு என்ஜின் உடைந்ததால் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானத்தில் பயணம் செய்த 99 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் உட்பட யாருக்கும் பாதிப்பில்லை என்றும் இந்த விபத்து குறித்து சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் விமான பராமரிப்பு பணிகளுக்காக ஏராளமான பணத்தை செலவு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY