பிரசாந்தனுக்கு பிணை

0
180

(விஷேட நிருபர்)

Prasanthanஆரையம்பதி இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனுக்கும் அவரது சகோரார் பி.ஹரனுக்கும் இன்று (29) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனுக்கும் அவரது சகோதரர் பி.ஹரன் ஆகியோருக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வழக்கு மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவர்களிருவரும் தலா ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப்பணமும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் சரீரப்பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன் இவர்களிருவரும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் நண்பகள் 12.00 மணிக்கு முன்னதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென மேல் நீதிமன்ற நீதிபதி இவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு காத்தான்குடி பெரிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY