அசென்ஷன் தீவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

0
99

201608291132428271_Quake-of-magnitude-7-4-strikes-northwest-of-Ascension-Island_SECVPFஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவில் இன்று 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்பிரிக்க நாட்டின் கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 1600 கிலோமீட்டர் தூரத்திலும், பிரேசில் நாட்டு கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 2250 கிலோமீட்டர் தூரத்திலும், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசென்ஷன் தீவு எனப்படும் எரிமலைகள் சூழ்ந்த தீவு கூட்டம் அமைந்துள்ளது.

இந்த அசென்ஷன் தீவின் வடமேற்கே சுமார் 975 கிலோமீட்டர் தூரத்தில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏதும் உருவாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY