புருசெல்ஸ் நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

0
123

201608291204238124_Belgian-media-reports-blast-outside-criminology-institute_SECVPFபெல்ஜியம் நாட்டின் தலைநகரான தலைநகர் புருசெல்ஸ் நகரின் அரசு குற்றவியல் ஆய்வு பயிலகம் (criminology institute) வாசலில் இன்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 2 மணியளவில் நிகழ்ந்த இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலால் உயிர்பலியோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த தாக்குதலால் அரசு குற்றவியல் ஆய்வு பயிலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை உள்ளூர் போலீசாரும், தீவிரவாத தடுப்பு அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படையினரும் சுற்றிவளைத்து மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி புருசெல்ஸ் நகரில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 32 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

LEAVE A REPLY