சாய்ந்தமருது கரப்பந்தாட்ட மைதானத்திற்கு சுற்றுமதில் அமைக்க ஏற்பாடு

0
110

(அஸ்லம் எஸ்.மௌலானா)

unnamed (7)சாய்ந்தமருது பொலிவேரியன் நகரத்தில் அமைந்துள்ள கரப்பந்தாட்ட மைதானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் பணிப்பாளர் சிசிர குமார, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் கங்கா, மாவட்ட இளைஞர் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி முபாறக் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி பைசல் அமீன், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.உதுமாலெப்பை ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இளைஞர் நாடாளுமன்ற வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவில் இச்சுற்றுமதில் அமைக்கப்படவிருப்பதாக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர்களின் நீண்ட காலத்தேவையாக இருந்து வந்த கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் கடின பந்து பயிற்சி கூடம் என்பன கடந்த வருடம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத்தின் முயற்சியினால் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘சிரம சக்தி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY