வாகன விபத்து: இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0
143

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed (4)திருகோணமலை-புத்தளம்’ பிரதான வீதி- மொறவெவ சந்தியில் இரண்டு டிமோ பட்டாக்களும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் இன்று (29) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் வத்தேகம-டி.கம்மானய இலக்கம் 07 இல் வசித்துவரும் டி.எம்.அனுறுத்த தரிது (25வயது) மற்றும் கல்கமுவ-ஹதறகல்ல-பகுதியச்சேர்ந்த துமித் வண்ணிநாயக்க (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- நாமல்வத்தை பகுதியிலிருந்து பால் ஏற்றிக்ெகாண்டு வந்த டிமோ பட்டா -பிரதான வீதியினூடாக வந்த டிமோ பட்டாவுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் இரு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY