காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த 8 மாதங்களில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழப்பு

0
117

R.G. Lal Thusara(விஷேட நிருபர்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் (25.08.2016) வரை வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.லால் துஸார தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இவ்வாண்டு(2016) ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25.8.2016 வரை 50 வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் படுகாயங்களுக்குள்ளாகியும் 23 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுமுள்ளனர்.

32 வாகனங்களும் இந்த விபத்துக்களினால் சேதமடைந்துள்ளன. இந்த விபத்துக்கள் காத்தான்குடி மற்றும் கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆகஸ்ட் மாதத்தின் முதலாம் திகதி தொடக்கத் இன்று வரை ஆறு விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்தும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன விபத்துக்கள் மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புனர்வு நடவடிக்கைகள் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பொலிசாரினால் நடாத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY