முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது – ஜனாதிபதி

0
253

Maithiri Bala_CIமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பு பிரதானி ஒருவர் புர்காவை தடை செய்ய வேண்டுமென யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத செயற்பாடுகளினால் நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உண்டா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் கிடையாது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் இதனால் சில அடிப்படைவாதிகளின் பிரச்சாரத்திற்காக இவ்வாறு புர்கா அணியத் தடை விதிக்க வேண்டியதில்லை என ஜனாதிபதி கூறியதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY