ஹெரொயினுடன் ஒருவர் கைது

0
95

(அப்துல்சலாம் யாசீம்)

Arrestதிருகோணமலை-ஜயபுர பகுதியில் 440மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (28) பிற்பகல் 12-15மணியளவில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-சீனக்குடா வீதி-இல 880 இல் வசித்து வரும் டி.வி.படபெதிகே உபுல் அனுறுத்த (42வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-ஜயபுர பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை திங்கக்கிழமை கன்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY