தபால் பெட்டிகளிலுள்ள கடிதங்கள் எடுக்கப்படுவதில்லையென பிரதேச மக்கள் விசனம்

0
95

(அப்துல்சலாம் யாசீம்-)

unnamed (6)திருகோணமலை-மஹதிவுல்வெவ தபால் அலுவலகத்தினால் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் கடைளில் வைக்கப்பட்டிருக்கின்ற தபால் பெட்டிகளிலுள்ள கடிதங்கள் எடுக்கப்படுவதில்லையென பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தபால் பெட்டிகளை நம்பி கடிதங்களை பெட்டிக்குள் போடுபவர்கள் தபால் திணைக்களத்தையும்-தபால் உத்தியோகத்தர்களையும் நம்பியே அப்பெட்டிக்குள் கடிதங்களை போட்டுச்செல்கின்றனர்.

ஆனாலும் தபால் பெட்டிக்குள் போடப்படுகின்ற கடிதங்கள் மாதத்திற்கு ஒரு முறை கூட எடுக்கப்படுவதில்லையென கடை உரிமையாளர்களும் தெரிவித்தனர்.

எனவே தபால் பெட்டியையும்-தபால் அலுவலகத்தையும் நம்பி போடப்படுகின்ற கடிதங்கள் உரிய தினத்திற்குள் கிடைக்கும் விதத்தில் செயற்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY